NIA Raid: சென்னையில் தங்கி ISIS அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தட்டித் தூக்கிய NIA அதிகாரிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nia Raid: சென்னையில் தங்கி Isis அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தட்டித் தூக்கிய Nia அதிகாரிகள்!

NIA Raid: சென்னையில் தங்கி ISIS அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தட்டித் தூக்கிய NIA அதிகாரிகள்!

Kathiravan V HT Tamil
Jan 28, 2025 02:25 PM IST

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடந்தன.

NIA raid: சென்னையில் தங்கி ISIS அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தட்டித் தூக்கிய NIA அதிகாரிகள்!
NIA raid: சென்னையில் தங்கி ISIS அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தட்டித் தூக்கிய NIA அதிகாரிகள்!

இன்று காலை முதல் சோதனை 

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடந்தன. சந்தேகத்திற்கு உரிய நபர்களின் மறைவிடங்களில் நடத்தப்படும் இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தொடர்புடைய நபர்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதே என்.ஐ.ஏ அதிகாரிகளின் நோக்கம் என தகவல்கள் கூறுகின்றன. 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்குகளை என்ஐஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. 

என்.ஐ.ஏ சோதனை

கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் ஊக்குவித்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை என்ஐஏ கைது செய்தது. இந்த வழக்கில் என்ஐஏ விசாரணையில், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் பயங்கரவாத செயலுக்கு நிதி வழங்க கூட்டு சேர்ந்தது தெரியவந்தது. தீவிரவாதம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு கிளை வழக்கு தனித்தனியாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்ஐஏவால் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழிவகுத்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.