Top 10 News: நாட்டின் நீண்ட கடல் பாலத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி உள்ளிட்ட செய்திகள்!
Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
•சென்னையில் நடைபெற்ற அயலக தின விழாவில் 13 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார் எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பதாகவும் தெரிவித்தார்.
•இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தேர்வு பரப்புரையை தொடங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
•பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். பேருந்து வசதி குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.
•பொங்கல் பண்டிகை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தென்மாவட்ட விரைவு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன.
• சென்னையில் நேற்று ஏராளமானோர் ஊருக்கு புறப்படுவதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உகந்தபடி வாகனங்கள் சென்றது. இன்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
•சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை செஷன்ஸ் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
•தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறும் என மாநில தலைவர் கே. அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
•சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 602 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.13) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
•மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்கும் நாட்டின் மிக நீண்ட கடல்பாலமான அடல்சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பாலத்தின் மீது சிறிது தூரம் நடந்து சென்றார்.
•புழல் - அம்பத்தூர் சாலையில் உள்ள Sea shelter warehouse என்ற தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள், உடை, வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
டாபிக்ஸ்