தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Netizens Comment About Kamal Hassan's Mnm Joins Dmk Led Alliance

Kamal Hassan: திமுக கூட்டணியில் இணைந்த மநீம.. கமல்ஹாசனை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Karthikeyan S HT Tamil
Mar 09, 2024 05:04 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் இணைந்தது மநீம.
திமுக கூட்டணியில் இணைந்தது மநீம.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவை தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும், இதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும், மக்கள் நீதி மய்யம் ஒரு தேர்தல் விளம்பரத்தை கடந்த அப்போது வெளியிட்டது.

இந்த விளம்பரம் அன்றைக்கு கமல் முதல் முறையாக அரசியலில் குதித்த காரணத்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரம் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சில மாற்றங்கள் செய்து அதை கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த தேர்தலில் மநீம தோல்வி அடைந்தாலும் நான்கு தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அரசியல் அடிச்சுவட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 14 மாதங்களிலே தேர்தலை சந்தித்து கணிசமாக வாக்கு வங்கியை நிரூபித்து கவனிக்கத்தக்க கட்சியாக உருவெடுத்தது.

இதே நம்பிக்கையுடன் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 154 தொகுதிகளில் போட்டியிட்டது மநீம. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக அரசியலில் களம் காண முயன்ற கமல்ஹாசன் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவியதால், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் 2021 ஆம் ஆண்டு பிற கட்சிக்கு தாவினார்கள்.

இந்த சூழலில் கூட்டணி அரசியல் என்ற பாதைக்கு திரும்பியுள்ளார் கமல்ஹாசன். ஆம், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில், இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா தொகுதி திமுக வழங்கியுள்ளது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடவில்லை. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

இந்த நிலையில் தான், தனித்து களம் கண்ட கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளனர். 

கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்