வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?

வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Apr 16, 2025 02:40 PM IST

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்கா நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணைப் புகார் அளித்துள்ளார்.

வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்..  நடந்தது என்ன?
வரதட்சணையாக இருட்டு கடையை கேட்டு மிரட்டும் கணவர் வீட்டார்.. காவல்துறையில் புகார் அளித்த உரிமையாளர் மகள்.. நடந்தது என்ன?

கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை வீட்டார்

திருமணமாகி 40 நாள்களிலேயே வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றித் தரும்படி, கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீகனிஷ்கா அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மருமகன் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தனது மகளை துன்புறுத்தியதாகவும், தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரவேண்டும் எனவும் மருமகன் பல்ராம் சிங் மிரட்டுவதாகவும் கவிதா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்

கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரான யுவராஜ் சிங் என்பவரின் மகன் பல்ராம் சிங், நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடையின் உரிமையாளரான கவிதாவின் மகள் கனிஷ்கா ஆகியோரிடையே கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மிகப்பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இருட்டுக்கடை அல்வா கடையின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கடையின் நிர்வாகம் சார்பில் வாழ்த்தியவர்களுக்கும், வருகை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து வழக்குரைஞர் கூறுகையில், இருட்டுக்கடையுடன் கூடுதல் வரதட்சணை கேட்டு கனிஷ்காவை கணவர் வீட்டார் துன்புறுத்தியிருக்கிறார்கள். திருமணமான ஒரு சில நாள்களிலேயே அவரது குடும்பத்தினர் இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமான வகையில் இந்த திருமணம் நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்ததாக மணப்பெண் கனிஷ்கா காவல்துறை ஆணையர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.