Nayinar Nagendran: பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை உள்ளிட்டோர் ஆதரவுடன் விருப்பமனு!
நான் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்து உள்ளேன். என் பெயரை பரிந்துரை செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி, பாஜக தலைவர் யார் என்பதை நாளை அறிவிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

Nayinar Nagendran: பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை உள்ளிட்டோர் ஆதரவுடன் விருப்பமனு!
பாஜக மாநிலத் தலைவர் போட்டிக்கு அண்ணாமலை ஆதரவுடன் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார்.
நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவர் ஆக்க அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கருப்பு முருகானந்தம், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 10 பேர் முன் மொழிந்து உள்ளனர்.
பாஜக மாநிலத்தலைவர் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் போட்டியின்றி பாஜக மாநிலத் தலைவராக வாய்ப்புகள் உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
