‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!

‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 13, 2025 02:00 PM IST

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது! முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!

‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!
‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!

இந்த கூட்டணி தான் உங்கள் கூடாரத்தை

‘‘நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்! ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்! ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஸ்டாலின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது! முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!

யாராலும் மாற்ற முடியாது

இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்! பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே! இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது.

அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது!’’ என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.