120 பெண்கள், 1900 ஆபாச படங்கள், 400 உல்லாச வீடியோக்கள்.. நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை!
Nagercoil Kasi Case: 120-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோயிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

120-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நாகர்கோயிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவரது மகன் காசி. 27 வயதான இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார். கல்லூரி மாணவிகள் சிலரிடமும் நெருங்கி பழகி அதை வீீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளார்.
120 பெண்களின் 400 வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பெண்கள், கல்லூரி மாணவிகள் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காசியின் லேப்டாப்பில் அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை தங்கபாண்டியன் அந்த ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காசி சார்பில் பல முறை ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் சிறுமிகள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாலும், 17 வயது சிறுமி ஒருவர் சாட்சி அளித்திருப்பதாலும் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று சிபிசிஐடி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் காசிக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, காசியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தமிழகத்தில் பரவலாக பேசப்பட்ட இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்