Seeman: பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ரெடி? நீங்க ரெடியா? சீமான் சவால்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman: பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ரெடி? நீங்க ரெடியா? சீமான் சவால்!

Seeman: பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ரெடி? நீங்க ரெடியா? சீமான் சவால்!

Kathiravan V HT Tamil
Jan 12, 2025 02:08 PM IST

திமுகவை எதிர்த்தால் ஆரியத்திற்கு ஆதரவாகவிடும் என்று சொல்கிறார்கள். பெரியார் அவர்கள் கடைசி வரை ஆரியர்கள் உடன் தோழமை கொண்டு இருந்தார். மூதறிஞர் ராஜாஜி உடன் அவர் நட்பில் இருந்தார். மணியம்மையை கல்யாணம் செய்ய வரும் போது, சாட்சிக் கையெழுத்து போட வாங்க என்று ஆரியத்தை துணைக்கு அழைத்தார்.

பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ரெடி? நீங்க ரெடியா? சீமான் சவால்!
பெரியார் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ரெடி? நீங்க ரெடியா? சீமான் சவால்!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரியாரை எதிர்த்தால், திராவிடத்தை எதிர்த்தால், திமுகவை எதிர்த்தால் ஆரியத்திற்கு ஆதரவாகவிடும் என்று சொல்கிறார்கள். பெரியார் அவர்கள் கடைசி வரை ஆரியர்கள் உடன் தோழமை கொண்டு இருந்தார். மூதறிஞர் ராஜாஜி உடன் அவர் நட்பில் இருந்தார். மணியம்மையை கல்யாணம் செய்ய வரும் போது, சாட்சிக் கையெழுத்து போட வாங்க என்று ஆரியத்தை துணைக்கு அழைத்தார். பேரறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து வெளியில் வந்த பின் திமுக போட்டியிடும் போது ராஜாஜியின் சுதந்திரா கட்சி உடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். ஆரிய ஓட்டும், கூட்டும் இனிக்கிறது. நாங்கள் திராவிடத்தை எதிர்த்தால் ஆரியன் உள்ளே வந்துவிடுவானா?. 

பெரியாரை எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளே வந்துவிடுமாம். வள்ளலார், வைகுண்டரை விட இந்த கோட்பாட்டை எதிர்த்து புரட்சி செய்துவிட்டீர்கள். யாராவது பேசுங்கள் பார்ப்போம். இந்த கோட்பாட்டுக்கு எதிராக புதிய கோட்பாட்டை உருவாக்கியவர் வல்லளார். பசிப்போக்கும் வேலையை தந்தை பெரியார் அவர்கள் செய்தது உண்டா?

பெரியாரின் சமூகநீதி கிடைத்துவிட்டது என்றால் 10.5% இட ஒதுக்கீட்டை கேட்பது ஏன்?. நான் பொது விவாதத்திற்கு இரு கரம் விரித்து நிற்கிறேன். அம்பேத்கர், பெரியாரை ஒரே கோட்டில் நிறுத்துவதை நிறுத்துங்கள். உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் என கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.