Seeman Arrest: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!
Seeman Arrest: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்பார்த்தைதை விட அதிக கூட்டம் வந்ததாக கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்தது. இன்றைய தினம் புத்தாண்டு தினத்தையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளதால், ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் அறிவித்தார். வள்ளுவர் கோட்டத்திற்கு வந்த சீமான் காரில் இருந்து இறங்குவதற்கு முன்னரே, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஊடகங்களை சந்திக்க சீமான் முயன்ற நிலையில், அதற்கும் போலிசார் அனுமதி மறுத்துவிட்டனர். சீமான் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.
சீமான் பேட்டி
இதுதொடர்பாக பேசிய அவர், “நான் எதற்காக போராடுகிறேன் என்று கூட சொல்லவிட அனுமதி மறுக்கிறார்கள். உரிய நீதியை அந்த தங்கச்சிக்கு கொடுங்கள் என்று சொல்லி போராட வந்தால் கைது செய்கிறார்கள். உண்மையிலேயே இது ஜனநாயகமா?, எனது கைது கொடுமையிலும், கொடுமை இது. அறவழியில் போராடுபவர்களை எதற்கு கைது செய்கிறீர்கள். இந்த கொடுமைக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்பேன்” என சீமான் கூறி உள்ளார்.