Kaliammal: ’விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைகிறேனா?’ நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் சொன்ன பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kaliammal: ’விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைகிறேனா?’ நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் சொன்ன பதில்!

Kaliammal: ’விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைகிறேனா?’ நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் சொன்ன பதில்!

Kathiravan V HT Tamil
Jan 31, 2025 02:46 PM IST

காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது.

Kamiyammal: ’விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைகிறேனா?’ நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் சொன்ன பதில்!
Kamiyammal: ’விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைகிறேனா?’ நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் சொன்ன பதில்!

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் முன்னிலையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறியதல், தவெகவுக்கு சாதகம் மற்றும் பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்?

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான காளியம்மாளும் இன்றைய தினம் விஜயை சந்தித்து தவெகவில் இணைத்துக் கொள்வார் என்ற தகவல் வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர் காளியம்மாள். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி பிரதிநிதியாக ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் கவனிப்பை பெற்று இருந்தார். இந்த நிலையில் காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காளியம்மாளும் பங்கேற்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

ஊடக செய்திகளுக்கு மறுப்பு

இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா, சிடிஆர்.நிர்மல் குமார் ஆகியோருடன் காளியம்மாளும் விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் தவெகவில் இணைவது குறித்து வெளியான செய்திகளுக்கு காளியம்மாள் மறுப்பு தெரிவித்து உள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.