Kayalvizhi Seeman: ’சீ…! இவ்வுளவு பெண்கள் இருக்கும் போது இந்த பொம்பளைய பிடிச்சிருக்க பாரு’ சீமானை திட்டிய கயல்விழி!
”அவர் மலைபோல் இருக்கும்போது எங்களுக்கு என்ன மன உளைச்சல் உள்ளது - கயல்விழி சீமான்”

’இவ்வுளவு பெண்கள் இருக்கும் போது இந்த பொம்பளைய பிடிச்சிருக்க பாரு’ என தனது மனைவி திட்டியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜரான பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ’சீமான் மீது வந்த விமர்சனங்களை ஒரு பெண்ணாகவும், மனைவியாகவும் எப்படி தாங்கிக்கொண்டீர்கள்?’ என கயல்விழியிடன் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எனக்கு இதில் எந்த மன உளைச்சலும் இல்லை, எல்லோரும் வந்து அழைத்து ஆறுதல் சொல்லும்போதுதான் எனக்கு எதற்கு ஆறுதல் சொல்றாங்க என தோன்றியது. அவர் மலைபோல் இருக்கும்போது எங்களுக்கு என்ன மன உளைச்சல் உள்ளது என கூறினார்.
பின்னர் பேசிய சீமான், ஓரே ஒரு இடத்தில் மட்டும் என்னிடம் கோபப்பட்டார்கள். ‘சீ....! இவ்வுளவு பெண்கள் இருக்கும் கொள்ளைல பழகுறதுக்கு ஒரு பொம்பள பிடிச்சி இருக்கபாரு’ என எனக்கு திட்டு விழுந்தது. அதை பற்றி பேசுறதே இல்லை வீட்டில் என சிரித்துக் கொண்டே பேட்டியை முடித்தார்.

டாபிக்ஸ்