Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்த சீமான்..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East By-election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்த சீமான்..!

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்த சீமான்..!

Karthikeyan S HT Tamil
Jan 14, 2025 10:33 AM IST

Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்த சீமான்..!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பொங்கல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்த சீமான்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆளும் கட்சியான திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனப் பதிவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக - நாம் தமிழர் கட்சி இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024 ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டுள்ளார்.

வேட்பாளர் சுய விபரம்:

பெயர்: மா.கி.சீதாலட்சுமி

கணவர் பெயர்: இரா.செழியன், எம்.இ.

தந்தை பெயர்: ம.கிருஷ்ணன்

தாயார் பெயர்: காந்திமதி

ஊர்: மாரப்பம்பாளையம்.

படிப்பு: முதுகலை ஆய்வியல் நிறைஞர், (எம்.ஏ. எம்பில்.,) இளங்கலை பொருளாதாரம் .கோபி கலைக் கல்லூரி. முதுகலை ஆய்வியல் பாரதியார் பல்கலைக் கழகம். கோவை.

பணி: 13 ஆண்டுகள் ஆசிரியப் பணி. (2000 - 2013)

தற்போதைய பணி: கேபிள் டிவி ஆப்ரேட்டர், விவசாயம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.