Seeman vs Periyar: “தமிழன் என்றால் யார்?.. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை”.. சீமான் காட்டம்..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman Vs Periyar: “தமிழன் என்றால் யார்?.. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை”.. சீமான் காட்டம்..!

Seeman vs Periyar: “தமிழன் என்றால் யார்?.. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை”.. சீமான் காட்டம்..!

Karthikeyan S HT Tamil
Jan 09, 2025 02:49 PM IST

“மண்ணின் விடுதலைக்காக சொத்தை விற்றவர் என் பாட்டன் வ.உ.சி. ஆனால், நீங்கள் தன்னுடைய சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் பெரியார்” - சீமான்

Seeman vs Periyar: "தமிழன் என்றால் யார்?.. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை".. சீமான் காட்டமான பேச்சு!
Seeman vs Periyar: "தமிழன் என்றால் யார்?.. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை".. சீமான் காட்டமான பேச்சு!

என் தலைவனை 2008 பிப்ரவரி மாதம் நான் சந்திக்கும் வரை நானும் இந்த திராவிட திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருந்தேன். அவரை சந்தித்தப் பிறகுதான் தமிழன் என்றால் யார்… தமிழ் தேசியம் என்றால் என்ன? தமிழருக்கு தேவையான அரசியல் என்ன என்று தெரிந்த பிறகுதான் இந்த அரசியலை கட்டமைக்கிறேன். அதற்கு குறுக்கே வந்து, இது பெரியார், இது திராவிடம் மாடல், பெரியார் இல்லை என்றால் ஒன்றுமில்லை என்று சொல்வதா?

திராவிடம் என்று கூறியவர்கள் திருடர்கள். பெரியார் சாதி ஒழிப்பு பற்றி பேசினார். பெரியார் பெண்ணியம் பற்றி பேசினார் என்றால் பரவாயில்லை.. பெரியார் தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? .. சிங்காரவேலர், ஜீவானந்தம்,  இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கக்கன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?. மண்ணின் விடுதலைக்காக சொத்தை விற்றவர் என் பாட்டன் வ.உ.சி. ஆனால் தன்னுடைய சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் பெரியார். திராவிடத்தை, பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை". சீமான் என்று பேசியுள்ளார்.

பெரியாரின் பெண்ணிய உரிமை, பகுத்தறிவு, சமூகநீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ள பேசிய சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.