சட்டமன்றத் தேர்தல் 2026: வேதாரண்யம் தொகுதியில் நாதக சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டி!
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இடும்பாவனம் கார்த்திக் உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இடும்பாவனம் கார்த்திக் உள்ளார். சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான், வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி
வேதாரண்யம் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1962 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 14 தேர்தல்களில், அதிகபட்சமாக திமுக 6 முறை வெற்றி பெற்று உள்ளது. வேதாரண்யம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளார்.
2021 தேர்தலில் வாக்கு சதவீதம்
கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 78,719 வாக்குகளை பெற்றார். இது பதிவான வாக்கு விழுக்காடுகளில் 50.02% ஆகும். திமுக வேட்பாளர் எஸ். கே. வேதரத்தினம் 66,390 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே. ராஜேந்திரன் 9,106 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் பி. எஸ். ஆறுமுகம் 1,284 வாக்குகளையும் பெற்றனர்.