NTK vs BJP: ’விரைவில் நாம் தமிழர் கட்சியினரை NIA கைது செய்யும்!’ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
”NIA RAID: நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நமக்கு என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது”

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், தேசத்தின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது. தமிழ்நாடு காவல்துறையினர் கூட இதனை கண்காணிக்கவில்லை.
என்.ஐ.ஏ நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை கண்காணித்த பிறகே அவர்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய உள்ளனர். நாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதம் செய்பவர்களையும் என்.ஐ,ஏ என்ற தேசிய பாதுகாப்பு முகமை கண்காணிக்கும்.
நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நமக்கு என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது. பயங்கரவாதம், நாட்டின் ஒற்றுமையை சீர்க்குலைப்பவர்களை கண்காணிக்கும் அமைப்பாக என்.ஐ.ஏ உள்ளது. அந்த வேலையை அந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.