’முரசொலி எங்களை சாடி எழுதவில்லை!’ முத்தரசன் வினோத விளக்கம்! திமுக கூட்டணி தொடரும் என அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’முரசொலி எங்களை சாடி எழுதவில்லை!’ முத்தரசன் வினோத விளக்கம்! திமுக கூட்டணி தொடரும் என அறிவிப்பு!

’முரசொலி எங்களை சாடி எழுதவில்லை!’ முத்தரசன் வினோத விளக்கம்! திமுக கூட்டணி தொடரும் என அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Jan 05, 2025 03:48 PM IST

திமுகவுக்கும் மார்க்ஸ்ட் , விசிக, சிபிஐ கட்சிகள் இடையே முரண்பாடு உள்ளது போல் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணிதான் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும்.

’முரசொலி எங்களை சாடி எழுதவில்லை!’ முத்தரசன் வினோத விளக்கம்! திமுக கூட்டணி தொடரும் என அறிவிப்பு!
’முரசொலி எங்களை சாடி எழுதவில்லை!’ முத்தரசன் வினோத விளக்கம்! திமுக கூட்டணி தொடரும் என அறிவிப்பு!

திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ”தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா?” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி கேள்வி எழுப்பி இருந்தார். 

கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி பதில்

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலியில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை!

‘தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது.

‘முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் கே.பி. அவரை பேசவிடாமல் தடுத்துள்ளார்களா? இல்லை!

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்?

எப்போதும் நட்போடும், எந்த நேரத்திலும் தோழமையுடனும் பொது இடங்கள் அனைத்திலும் மதிப்பளித்தும், உரிய வகையில் அனைத்துக்கும் பதிலளித்தும் செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை எப்போதும் சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியும் நிர்பந்தமும் கே.பி.க்கு இருக்கலாம். ஆனால் தோழமைக் கட்சிகளிடம் சிறு விண்ணப்பம் வந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்கும் இயக்கம்தான் தி.மு.கழகம் என்பதை வஞ்சம் இல்லாத தோழர்கள் உணர்வார்கள்.

தமிழ்நாட்டில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லையா? நடக்கவே இல்லையா? ‘தீக்கதிர்’ நாளிதழை ஒழுங்காகப் படிக்கும் யாரும் இதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கே.பாலகிருஷ்ணன் ஆறு நாட்களுக்கு முன்னால் தான் எழுதிய அறிக்கையை அவரே முழுமையாக முதலில் படிக்க வேண்டும்.

டிசம்பர் 28 ஆம் தேதியிட்ட ‘தீக்கதிர்’ நாளிதழிலில் ‘வியூகம் வகுக்க விழுப்புரத்தில் சங்கமிப்போம்’ என்று இதே பாலகிருஷ்ணன் 29 பிரிவுகளாக கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

புதிய பொருளாதாரக் கொள்கை, மதவெறி, ஆளுநருக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், சாதிய ஒடுக்கு முறை, தீண்டாமைக் கொடுமைகள், பெண்கள் – - குழந்தைகள் மீதான வன்முறை, சிறுபான்மை யினர் மீதான வன்முறை, வீடுகளை அப்புறப் படுத்துதல், வாழ்விடப் பிரச்சினைகள், வீட்டு மனைப் பட்டா, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம், பெரம்பலூர் சிறுமி தற்கொலை, விழுப்புரம் பாலியல் கொடுமைகள், வேங்கை வயல், நாங்குநேரி மாணவன் தாக்குதல், விழுப்புரம் கோவில், சங்கராபுரம் பிரச்சினை, திருவண்ணா மலை மாரியம்மன் கோவில், சேலம் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவு - ஆகிய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தியதாக பாலகிருஷ்ணன் மார்தட்டிக் கொள்கிறார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.? என முரசொலி விமர்சனம் செய்து இருந்தது. 

முத்தரசன் விளக்கம் 

முரசொலியின் விமர்சன கட்டுரை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், தோழர் பாலகிருஷ்ணன் பேசும் போது, ஆட்சியை பற்றி விமர்சனம் செய்து பேசியது மற்றும் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என அவர் எழுப்பிய கேள்விகள் குறித்து முரரொலி தரப்பில் பதில் அளித்து உள்ளார்கள். அவர்கள் எங்களை சாடி எழுதியதாக தெரியவில்லை. இதை பெரிதுபடுத்தி திமுகவுக்கும் மார்க்ஸ்ட் , விசிக, சிபிஐ கட்சிகள் இடையே முரண்பாடு உள்ளது போல் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணிதான் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும்.  

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.