Tamil News  /  Tamilnadu  /  Murder In Chennai Due To Homosexuality

Murder: ஓரினச்சேர்க்கை விபரீதம்! நண்பரை கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்!

Kathiravan V HT Tamil
Jan 11, 2024 09:24 AM IST

”ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த லோகேஷ், வாஞ்சிநாதன் இருவருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்ததாகவும், இதனால் விடுதியில் அறை எடுத்து தங்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது”

லேகேஷ் மற்றும் வாஞ்சிநாதன்
லேகேஷ் மற்றும் வாஞ்சிநாதன்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஜனவரி 8ஆம் தேதி அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் வீடு திரும்பாத நிலையில் செல்போன்களும் சுவிட் ஆப் ஆனதால் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் அலுவலகம் சென்ற லோகேஷ் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அமைந்தகரை காவல் நிலையத்திலும், வாஞ்சிநாதனின் பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் வாஞ்சிநாதன், நேற்று முன் தினம் காலையில் தனது சகோதரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய தகவலில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டிருந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்நிலைத்திற்கு விவரத்தை தெரிவித்தனர். வாஞ்சிநாதனின் செல்போன் சிக்னலை வைத்து அவர், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிய வந்தது. 

கதவு பூட்டப்பட்டு இந்ததால், விடுதி ஊழியர்கள் உதவி உடன் கதவை திறந்து பார்த்தபோது லோகேஷ் தரையில் பிணமாக கிடந்ததையும், வாஞ்சிநாதன் தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். லோகேஷ் கழுத்தில் ‘ஷூ லேஸ்’ கட்டப்பட்டு இருந்தது. பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 

ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த லோகேஷ், வாஞ்சிநாதன் இருவருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்ததாகவும், இதனால் விடுதியில் அறை எடுத்து தங்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

வாஞ்சிநாதனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் லோகேஷ் தொடர்ந்து வாஞ்சிநாதனை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது திருமண வாழ்கை பாதிக்கப்படலாம் என கருதிய வாஞ்சிநாதன், லோகேஷை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து ‘ஷூ லேஸ்’ மூலம் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

WhatsApp channel

டாபிக்ஸ்