Murder : நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை.. அதிர வைக்கும் தென்காசி சம்பவம்!-murder a young man was killed after chasing him to run in the middle of the road shocking tenkasi incident - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Murder : நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை.. அதிர வைக்கும் தென்காசி சம்பவம்!

Murder : நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை.. அதிர வைக்கும் தென்காசி சம்பவம்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 22, 2024 01:14 PM IST

Tenkasi Murder : கனகராஜ் எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று ஓடி வந்தது. அந்த கும்பலை பார்த்த கனகராஜ் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனால் அவரை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை.. அதிர வைக்கும் தென்காசி சம்பவம்!
நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை.. அதிர வைக்கும் தென்காசி சம்பவம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை அடுத்த ஊத்துமலை அருகே  கீழக்கலங்கல் என்ற பகுதி உள்ளது. அங்குள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கனகராஜ் இவருக்கு வயது 26. கனகராஜ் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் எப்போதும் போல் நேற்று தன்வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இருந்தார்.

ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

அப்போது கனகராஜ் எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று ஓடி வந்தது. அந்த கும்பலை பார்த்த கனகராஜ் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனால் அவரை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த கனகராஜின் தந்தை நடராஜன் வெளியே ஓடி வந்தார்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த தந்த கும்பல் கனகராஜின் தந்தையையும் சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அந்த குப்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அரிவாள் வெட்டு விழுந்த கனகராஜ் சம்பவ இடத்திலேய ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துமலை காவல் துறையினர் உயிரிழந்த கனராஜின் உடலை கைப்பற்றினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிமைலயில் கிடந்த நடராஜனும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்வம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபாணியில் கடந்த ஆண்டு நடந்த சம்பவம் 

இதேபோல் கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு கிடார குளத்தை சேர்த்த மணி கண்டன். இவர் வழக்கு ஒன்றிற்காக தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம கும்பல் மணிகண்டனை ஓன்று ஓட ஓட விரட்டி வெட்டியது.‘

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தூத்துக்குடி சாத்தான் குளம் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் நடந்த தீவிர விசாரணையில் கடந்த 2020ம் ஆண்டு நாச்சியார் பட்டியில் ஆட்டுக்குட்டியை திருடினர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த மணிகண்டன் மற்றும் அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் சண்டை போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முத்துப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார்.  முத்துபாண்டி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதேபாணியில் தற்போது ஓட ஓட விரட்டி கனகராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஊத்துமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.