TVK Vijay: 'உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்' மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் வீரவணக்கம்!
”உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்”

தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ”உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!” என தெரிவித்து உள்ளார்.
