தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: கரையை கடந்தது புயல் ..அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- மேலும் முக்கிய செய்திகள்

Top 10 News: கரையை கடந்தது புயல் ..அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- மேலும் முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
Oct 25, 2023 07:43 AM IST

Morning Top 10 News: தமிழ்நாடு, இந்தியா, உலகம், பொழுதுபோக்கில் இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

டாப் 10 நியூஸ்
டாப் 10 நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்புவதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே 2 தளத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. 8 பேருந்துகளை நிறுத்தும் இடம், 12 கடைகள், ஓய்வுஅறை உள்ளிட்டவற்றுடன் புதிய பேருந்துநிலையம் அமைய உள்ளது

தேசம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவை சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று சந்தித்து தங்கள் பரிந்துரையை வழங்குவார்கள் என கூறப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசிக்கிறார்.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது காவலர்களை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றதால் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.

உலகம்

கனடாவின் வடக்கே ஒன்டாரியோவில் துப்பாக்கி சூட்டில் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

தீவிர புயலான ஹாமூன், புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்