Top 10 News : கே.பி. அன்பழகன் வழக்கு.. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்.. கனமழை எச்சரிக்கை.. மேலும் முக்கிய செய்திகள்!
Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விசாரணைக்கு வருகிறது. 10,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேரில் ஆஜராவதாக தகவல்.
தமிழகத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடம் சாா்ந்த விநாடி-வினா போட்டிகள் இணையவழியில் இன்று நடைபெறுகிறது.
சென்னை கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான தமிழக அரசின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் 534ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (நவ.6) லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேசம்
டெல்லியில் நிலவும் வரலாறு காணாத காற்று மாசினால் 2 கோடி பேருக்கு கண் எரிச்சல் பாதிப்பு என தகவல். 50% பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற காற்றுமாசு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தல்.
மிசோரம் தேர்தலுக்கு காணொளி மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். கடைசி வரை பிரச்சாரத்திற்கு செல்லாத ஒரே பிரதமர் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது, தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.