தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Morning Top 10 News On May 29, 2023

Top 10 News (29.05.2023) அக்னி நட்சத்திரம் நிறைவு.. மிரட்டும் அரிக்கொம்பன்..மணிப்பூரில் பதற்றம் - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
May 29, 2023 09:08 AM IST

Today Top 10 News: தமிழ்நாடு, இந்தியா, உலகம், பொழுதுபோக்கில் இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்தச் செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

டாப் 10 நியூஸ்
டாப் 10 நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த 26-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்றும் 4-வது நாளாக கோவையில் சோதனை நடைபெறுகிறது.

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 30 பேர், சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி சந்திப்பு மேம்பாலத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று பாலம் திறக்கப்பட்டது.

உலகம்

டோக்கியோ சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பானிய தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு, உழைப்பாளர்களுக்கான நாடு என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தேசம்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் அண்மையில் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் சண்டை தொடர்வதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.

புதிய நாடளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லையில் நடமாடும் அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், போலீசார் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

ஐபிஎல் டி20 இறுதிப்போட்டி இன்றும் நடைபெறாமல் போனால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, ஜெய்ஸ்வால், பரத், அஸ்வின், ஜடேஜா, ஹர்ஷத் பட்டீல், ஷர்துல் தாக்குர், குமார், ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாகட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்