Top 10 News: திமுக வேட்பாளர் பட்டியல் முதல் பிரதமரின் கோவை ரோட்ஷோ வரை! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Morning Top 10 News: பிரதமர் நரேந்திர மோடியின் கோவை ரோட்ஷோ முதல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, அதிமுக-பாமக கூட்டணி விவகாரம் குறித்த விவரங்கள் இதோ!
இன்றைய டாப் 10 செய்திகள்
- இன்று மாலை 5.30 மணி அளவில் கோயம்புத்தூர் வரும் பிரதமர் நரேந்திர மோடி சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை நடக்கும் ரோட்ஷோவில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி ரோட்ஷோ நடைபெறும் இடங்கள், இன்று இரவு மோடி தங்கும் ரேஸ்கோர்ஸ் சர்க்கியூட் ஹவுஸ் பகுதியில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 11 மணி முதல் நாளை காலை 11 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதமர் பின்னர் அங்கிருந்து சேலம் வருகிறார். சேலம் கெஜநாயகன் பட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.
- திரைப்படங்களில் ராமர், கிருஷ்ணனர் வேடம் அணிந்து மக்களை கவர்ந்தவர் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமாராவ் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக பாடுபட்ட என்.டி.ஆரை ஆந்திர மக்கள் மறக்கமாட்டார்கள் ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியதாக ஆந்திராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
- பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றம் தண்டனையைதான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளதாக தகவல்.
- மக்களின் உயிரை பணைய வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் திமுக பணம் பெற்று இருப்பது வெட்கக்கேடாது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம். மக்களவை தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள் என கருத்துப்பதிவு.
- தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடாது ஏன் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி உள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை போராடி கொண்டு வந்து நிறைவேற்றியது திமுக அரசுதான் என்றும் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.
- நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பாமக வெளியிடும் என தகவல். அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது.
- நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தொகுதி பங்கீடு பற்றி இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல். நாளை மறுதினம் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதால் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம்.
- மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் இன்று வெளியாக வாய்ப்பு, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் சார்பில் போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என தகவல்.
- கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோரி நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக இன்று காலை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
- கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பறிமுதல்; கடந்த சனிக்கிழமை மட்டும் 2.50 கோடி ரூபாய் பறிமுதல் என தகவல். சென்னையில் 70க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைத்து வாகன தணிக்கை செய்யப்படுகிறது.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.