Top 10 News: 44 மின்சார ரயில்கள் ரத்து முதல் பெட்ரோல் விலை குறைப்பு வரை -இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: 44 மின்சார ரயில்கள் ரத்து முதல் பெட்ரோல் விலை குறைப்பு வரை -இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Top 10 News: 44 மின்சார ரயில்கள் ரத்து முதல் பெட்ரோல் விலை குறைப்பு வரை -இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 17, 2024 07:17 AM IST

Morning Top 10 News: சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து..மகளிர் ப்ரிமியர் லீக் இறுதிப்போட்டி உள்பட இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.

டாப் 10 செய்திகள்
டாப் 10 செய்திகள்
  • நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை சிறைபிடித்தது இலங்கை கடற்படை.
  • லட்சத்தீவுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.3 வரை குறைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் தற்போது லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.30 குறைத்து அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் தினம் தோறும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக் காரணமாக, இன்று முதல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
  • காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு வந்த பாரத் ஜோடா நியாய யாத்திரை மும்பை தாராவியில் இன்று நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
  • சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட வரைவு தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது.
  • காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்க உள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • ஐ.பி.எல் தொடரில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதலாவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மகளிர் ப்ரீமியர் லிக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கோப்பையை வெல்லும் பெங்களூரு அணியின் கனவு இதிலாவது நிறைவேறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
  • சென்னை யானைக்கவுனியில் தனியார் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்த யாசர் அராபத், குணா ஜெயின் ஆகியோரிடம் இருந்து ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.