Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை.. உங்களுக்காக இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
Morning Top 10 News: இ-சேவை மையங்களில் இன்று முதல் LLR பெற விண்ணப்பிக்கலாம், அமமுக - பாஜக தொகுதி பங்கீடு உள்பட இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். திமுக 55 சதவீதம் வாக்குகளை என்றும் ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் இன்று முதல் எல்.எல்.ஆர் பெற விண்ணப்பிக்கலாம். மோட்டார் வாகனத்துறையின் இதர சேவைகளுக்கும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முன்னதாக, திருச்சியில் பாஜக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "அமமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி பிரதிநிதி கிஷன் ரெட்டியும் என்னிடம் இன்று தொலைபேசியில் பேசினார்கள். அவர்களிடம் பாஜக கூட்டணிக்கு அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தேன். கடந்த மூன்று மாதங்களாகவே பாஜக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அமமுகவின் கோரிக்கைகளை ஏற்கெனவே கடிதம் மூலமாக பாஜகவிடம் கொடுத்துவிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். மோடியே மீண்டும் ஆட்சியமைப்பார்." என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் சேர்ந்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், படகு ஒன்றை இடைமறித்து சோதனை செய்தபோது போதைப்பொருள் சிக்கியது.
எஸ்பிஐ வங்கியின் செயல்பாட்டை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "எஸ்பிஐ வங்கியால் தேர்தல் பத்திர தரவுகளை ஒரே நாளில் வழங்கிட முடியும் என தெரிவித்திருந்தேன். அதை இன்றைக்கு அந்த வங்கி நிரூபித்துள்ளது. 4 மாதம் அவகாசம் கேட்ட எஸ்பிஐ, ஒரே நாளில் தரவுகளை எப்படி வழங்கியது? பொய் சொன்ன வங்கி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் 662-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
உச்சநீதிமன்றம் இப்போது பொன்முடியின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுவதை தடுப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்