Top 10 News: விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்..தமிழக மீனவர்கள் கைது - இன்றைய டாப் 10 நியூஸ் இதோ..!
Morning Top 10 News: டெல்லியில் விவசாயிகள் போராட்டம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளை இங்கு பார்ப்போம்.
டாப் 10 நியூஸ்
Top 10 News, March 10: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
- நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாய சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
- சென்னையில் தொடர்ந்து 659-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்.9ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 9ஆம் தேதி இரவு 11.55 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும் இரவு 11.50 மணி வரை நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- பாகிஸ்தானின் அடுத்த அதிபராக மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் தந்தையுமான ஆசிப் அலி ஜர்தாரி அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் இன்று விருப்ப மனு பெறலாம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தோருக்கு இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் இன்று மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
- மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நேர்காணல் நடத்துகிறார். அப்போது வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.