Top 10 News: 'நீங்கள் நலமா' திட்டம் முதல் காவல்துறை எச்சரிக்கை வரை - இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: 'நீங்கள் நலமா' திட்டம் முதல் காவல்துறை எச்சரிக்கை வரை - இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Top 10 News: 'நீங்கள் நலமா' திட்டம் முதல் காவல்துறை எச்சரிக்கை வரை - இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 06, 2024 07:07 AM IST

Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

டாப் 10 செய்திகள், மார்ச் 06, 2024
டாப் 10 செய்திகள், மார்ச் 06, 2024
  • தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
  • நாகை, திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • தேர்தல் பத்திர விவகாரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் எஸ்பிஐ வங்கிக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்றும், நாளையும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  • 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
  • மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிவிப்புகளுக்கு தனது பேஸ்புக் பக்கத்தை அனைவரும் பின்தொடருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13 ஆம் தேதி டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை தடுத்தனர்.
  • இந்தியாவில் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி .
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பயிற்சிக்காக சென்னை வந்துள்ள எம்.எஸ்.தோனி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்.
  • காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாசிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.