Top 10 News: சதமடித்த வெயில்..தேர்தல் பத்திரங்கள் விவகாரம் - இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

வெயில் (கோப்புபடம்)
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, என இன்றைய டாப் 10 செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திங்கட்கிழமை ஈரோடு மற்றும் பரமத்திவேலூரில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி உள்ளது.
- நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நாம் தமிழர் தரப்பினர் முடிவு.
- தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விருப்பமனு அளிக்க உள்ளார்.
- சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று முதல் குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வருவாய்த்துறையினரின் போராட்டம் தொடர்ந்து 7-வது நாளாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தோர் விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரி பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடு ஆகியுள்ளது பிரான்ஸ்.
- மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் டி20 போட்டியில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.