Top 10 News: ’பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்!
”இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரை உடன் தொடங்குகிறது.
- மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பிக்களின் மீதான நடவடிக்கை ரத்து.
- அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இன்று ஆஜராகிறார். தாம் கைது செய்யப்பட்டால் தனது மனைவியை முதலமைச்சராக ஏற்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு வேண்டுகோள்.
- தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
- ’உங்களைத் தேடி உங்கள்’ ஊரில் திட்டத்தை இன்று முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது.
- நெல்லையில் மாநகராட்சி மேயரை கண்டித்து திமுக நிர்வாகிகள் மாமன்றத்தில் அல்வா கொண்டு வந்ததால் பரபரப்பு.
- கடலூரில் திமுக மேயருக்கு எதிராக 10 திமுக கவுன்சிலர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
- மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
- சென்னையில் உள்ள மக்களவை தொகுதிகளில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா என காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி.
- சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவின் மஜோஜ் சவுந்தர் முறைகேடாக வெற்றி பெற்றதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றச்சாட்டு
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.