Top 10 News: செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு முதல் கிளாம்பாக்கம் பேருந்து வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
”இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக்கூட்டம்.
- நாளை குடியரசுத் தலைவர் உரை உடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
- நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வரும் 3ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி உடனும் 4ஆம் தேதி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனும் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
- தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கூட்டணி மட்டுமே இருக்கும், மூன்றாவது அணி ஒரு அணியாக இருக்காது என திருமாவளவன் பேட்டி.
- பாஜக உடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி.
- எடப்பாடி பழனிசாமியை தவிர அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்து களமிறங்கினால் வெற்றி உறுதி என ஓ.பன்னீர் செல்வம் பேட்டி.
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.
- திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களுக்கு கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் வரும் ஒன்றாம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்கிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல், ஜடேஜா விலகல்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.