Top 10 News: ’முதல்வரின் வேண்டுகோள் முதல் ஈபிஎஸின் கேள்வி வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்!
”இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- இந்தியாவின் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் வலுப்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
- தற்போதய சூழலில் வெறுப்புக்கு எதிராக போராட வழிகாட்டுவது மேற்கு வங்கம் மற்றும் வங்காளிகளின் கடமை ஆகும் என பாரத் நியாய் யாத்திரையில் ராகுல் காந்தி பேச்சு
- பீகாரில் மீண்டும் பாஜக ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார் நிதிஷ் குமார்
- நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பிலப் குமார் சென்னையில் பேட்டி
- உயர்க்கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யூஜிசி அறிவிப்புக்கு கல்வி அமைச்சகம் மறுப்பு
- நாகை மாவட்டம் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை உள்ளதாக ஆதங்கம்
- கிளாம்பாக்கம் முனையத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
- மகாத்மா காந்தி நினைவுநாளில் மதநல்லிணக்க உறுதி மொழி ஏற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் முதலீட்டை பெறுவதற்காக, இல்லை கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக என ஈபிஎஸ் கேள்வி
- கேலோ இந்தியா போட்டியில் 77 பதக்கங்கள் உடன் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு நீடிக்கிறது.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.