Top 10 News: ‘மீண்டும் முதல்வராகும் நிதிஷ் குமார் முதல் திமுக தொகுதி பங்கீடு வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்!
”இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”

இன்றைய டாப் 10 நியூஸ்
- இந்தாண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசுகிறார்.
- ஊழல் புகார் வந்தால் அரசியல்வாதிகள் வெட்கித் தலைகுணிந்த நிலைமாறி தற்போது கொண்டாடும் அவலநிலை உள்ளது என அனைத்து இந்திய சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய வேண்டும் என சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேச்சு.
- பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மீண்டும் பீகார் முதலமைச்சராக தொடர உள்ளதாக தகவல்.
- தனது சுற்றுப்பயணங்களை ரத்து செய்து பீகார் விரைகிறார் அமித்ஷா.
- எட்டு நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- நாடாளுமன்றத் தொகுதி பங்கீடுகள் குறித்து திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இன்று தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை.
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என புதுக்கோட்டையில் அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு.
- இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை.

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.