Top 10 News: ’முதலமைச்சரின் எச்சரிக்கை முதல் ரஜினி பேச்சு வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்!
இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய டாப் 10 செய்திகள்
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது என விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 33 தீர்மானங்கள் விசிக மாநாட்டில் நிறைவேற்றம்.
- இந்தியா கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிக்கிறோம் என ஐக்கிய ஜனதாதளம் கட்சி திட்டவட்டம்.
- தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.
- மகாத்மா காந்தியை விமர்சித்து பேசியதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுகிறது.
- மறைந்த பாடகி பவதாரணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
- நடிகர் விஜய்க்கும் எனக்கும் எந்த போட்டியும் இல்லை என லால்சலாம் பட இசை வெளியீட்டு விழாவ் இல் நடிகர் விஜயகாந்த் பேச்சு.
- எனது தந்தை ரஜினிகாந்தை சங்கி என்று சொன்னால் கோபம் வரும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு.
- 97 ஒளியாண்டுகள் தொலைவில் நீர் நிறைந்த கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கிஸில் இந்திய அணி 421 ரன்கள் குவிப்பு.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.