Top 10 News: திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு சிறை..இன்றைய டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு சிறை..இன்றைய டாப் 10 செய்திகள்!

Top 10 News: திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு சிறை..இன்றைய டாப் 10 செய்திகள்!

Karthikeyan S HT Tamil
Jan 26, 2024 08:26 AM IST

இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்டோ,  மர்லினா
ஆண்டோ, மர்லினா

வீட்டு வேலைக்குச் சென்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவு. இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நேற்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

குடியரசு தின பொது விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.26) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி கடைமைப் பாதையில் மூவர்ணக் தேசிய கொடியை ஏற்றுகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு.

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னையில் நேற்று காலை முதல் கிளாம்பாக்கத்தைத் தாண்டி பெரும்பாலான பேருந்துகள் பயணிகளுடன் நகருக்குள் வரவில்லை. இதனால் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் காலமான பவதாரணியின் உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது.

உக்ரைன் போர்க் கைதிகள் 65 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் அதில்இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தோ்தல் தொடா்பாக தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சென்னையில் பிப். 13-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு.

அயோத்தி ராமா் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் தினசரி வருகை தந்து கொண்டிருப்பதால், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.