Top 10 News: ஆம்னி பேருந்துகளுக்கு தடை முதல் அதிமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்!
Morning Top 10 News: தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Morning Top 10 News
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
- தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மேலும், ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரிவாளால் கை,கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு கும்பல் தப்பியோட்டம். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி.போலீசார் விசாரணை.
- சென்னையில் ஜார்ஜ் டவுன் கொண்டித்தோப்பு, வளசரவாக்கம் பகுதிகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
- மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்தனர்.
- இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஐதராபாத்தில் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் இருஅணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறாா்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வரவுள்ள நிலையில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழித் வாகனங்கள் பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தைப்பூச தினத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளாா். பத்திரபதிவுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் வசூலிக்க வேண்டும்.
- வள்ளலார் தினத்தை முன்னிட்டு காரைக்காலில் இன்று மதுக்கடைகளை அடைக்க உத்தரவு. உத்தரவை மீறும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசிக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.