Top 10 News: அயோத்தி பிராண பிரதிஷ்டை முதல் வாக்காளர் பட்டியல் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய டாப் 10 செய்திகள்
- அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று பிற்பகல் 12.14 மணி அளவில் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
- டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பாலபுரஸ்கர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.
- தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை என நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
- அயோத்தி கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை பொது இடங்களில் நேரலை செய்ய புதுச்சேரி அரசு அனுமதி.
- பாஜகவால் தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் ஆபத்து வந்துள்ளதாக சேலம் இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
- இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் தடம்பதிக்க முடியாது என சேலம் இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
- வாக்களித்த மக்களை திமுக அரசு மறந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- பில்கிஸ் பானு வழக்கில் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் மீண்டும் சரண் அடைந்தனர்.
- அமெரிக்கா மூன்று ஆண்டுகளில் செய்யும் பணமில்லா பரிவர்தனையை இந்தியா ஒரு மாதத்தில் செய்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சு.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.