Top 10 News: அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர்! முதல் சேலத்தை கலக்கும் இளைஞரணி மாநாடு வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய டாப் 10 செய்திகள்
- ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட 22 தீர்த்தங்களிலும் பிரதமர் மோடி புனிதநீராடினார்.
- தனுஷ்கோடியில் நடைபெறும் அரிச்சல் முனையில் நடைபெறும் யாகபூஜையில் பங்கேற்கும் மோடி புனிதநீரை அயோத்திக்கு எடுத்து செல்கிறார்.
- திமுக இளைஞரணி சார்பில் சேலத்தில் மாநில உரிமை மீட்பு மாநாடு இன்று நடைபெறுகிறது.
- ராமர்கோயில் தொடர்பாக சமூகநல்லிணக்கத்தை பாதிக்கும் தவறான தகவல்களை ஒலிபரப்ப வேண்டாம் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல்
- சென்னை விமான நிலையத்தில் வரும் ஜனவரி 30ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
- அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று அவசர வழக்காக விசாரணை
- உரிமைகளை தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துவதாக திமுக இளைஞரணி மாநாடு குறித்து தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்
- கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையங்கள் வரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு.
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு இதுவரை 2 தங்கம் வென்றது.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என கமல்ஹாசன் அறிவிப்பு
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.