Tamil News  /  Tamilnadu  /  Morning Top 10 News On January 20, 2024

Top 10 News: கோலாகலமாக தொடங்கியது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்.. இந்திய பங்குசந்தை விடுமுறை.. முக்கிய செய்திகள்!

Divya Sekar HT Tamil
Jan 20, 2024 06:54 AM IST

Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகையில் 24 மணி நேரத்திற்கு லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறித்துத்துள்ளனர்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதான் நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வர் என இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் 22 ஆம் தேதி இந்திய பங்குசந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்ட ராமர் சிலையின் புகைப்படம் வெளியானது. கருவறையில் பால ராமர் சிலையை வைப்பது மரபு மீறல் என திக்விஜய் சிங் குற்றச்சாட்டு.

609வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று (ஜனவரி 20ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 609வது நாளாக தொடர்கிறது.

தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் ஜன. 21 முதல் ஜன.25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்.ஜப்பான் நாட்டின் விண்கலமான 'ஸ்லிம்' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை ஜப்பான் உருவாக்கியுள்ளது.

சபரிமலையில் இன்றோடு பக்தர்கள் தரிசனம் நிறைவு.

சலார் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி. 3-வது இடத்துக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்