Top 10 News: ’மோடி வருகை முதல் கெஜ்ரிவால் சம்மன் வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்!
”Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய மக்களால் சிங்கப்பெருமாள் கோவில் முதல் கடும் போக்குவரத்து நெரிசல்.
- திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி தொடர் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
- அலங்காநல்லூரில் 18 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு கார் பரிசு.
- அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக இரண்டாம் இடம் பிடித்த அபி சிந்தன் குற்றச்சாட்டு.
- ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி விளக்கம்.
- பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி திருச்சியில் வரும் 20ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை.
- கார்னிவெல் நிகழ்ச்சியை காண்பதற்காக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
- விமான ஓடுதளம் அருகே பயணிகள் உணவு அருந்திய விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு 1.20 கோடியும், மும்பை விமான நிலையத்திற்கு 90 லட்சமும் அபராதம்.
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக 4ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் ஈரான் உடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்திய வெளியுறவுத்துறை கருத்து.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.