Top 10 News: மாட்டுப்பொங்கல் முதல் பாலமேடு ஜல்லிக்கட்டு வரை! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
”Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- உழவுத் தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
- அவனியாபுரத்தை தொடர்ந்து மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
- ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்வதில் அரசியல் இல்லை எனவும் வரமாட்டோம் என்று சொல்வதுதான் அரசியல் என ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
- விமான புறப்பாடு தாமதமானால் பின்பற்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது விமான போக்குவரத்து இயக்குநரகம்.
- பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவரசனம் விருதினை வாங்கி கேரள அரசு மரியாதை.
- இருதரப்பு உறவுகள் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
- ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி நடைபயணம் நாகலாந்து சென்றடைந்தது.
- இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டதாக நிதி ஆயோக் அமைப்பு தகவல்.
- அயோத்தி ராமர் கோயிலில் பூர்வாங்க பூஜைகள் இன்று முதல் தொடங்குகின்றன.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.