Top 10 News: ’போகி கொண்டாட்டம் முதல் பிரதமரின் பொங்கல் கொண்டாட்டம் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.4

இன்றைய டாப் 10 செய்திகள்
- தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாட்டம்.
- தமிழ்நாட்டில் நேற்று வரை 91 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தகவல்.
- பொங்கலுக்காக ஊருக்கு சென்ற சென்னை வாசிகளால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.
- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் குழப்பம் நீடிப்பதாக புகார்.
- வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு தரும் என நம்பிக்கை கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
- வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி.
- மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட பாரத் ஜோடா யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.
- மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
- சீனாவின் எச்சரிக்கைக்கு மத்தியில் நடந்த தைவான் அதிபர் தேர்தலில் லாய் சிங் டே வெற்றி பெற்றர்.
- ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஹாக்கி போட்டியில் அமெரிக்காவிடம் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.