Top 10 News: ‘அனுமன் ஜெயந்தி முதல் பி.எஸ்.ராமன் பதவி ஏற்பு வரை’ இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய டாப் 10 செய்திகள்
- அதிமுகவின் பெயர், கட்சி, சின்னம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
- தமிழ்நாடு அரசின் புதிய அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பி.எஸ்.ராமன் இன்று பொறுப்பேற்கிறார்.
- போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்.
- தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா பணியிடை நீக்கம்.
- தமிழகம் முழுவதும் உள்ள அனுமன் கோயில்களில் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்.
- தமிழ்நாட்டில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
- அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் வளர்ந்த நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் மோடி பேச்சு.
- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று விசாரணைக்கு ஆஜராக கோரி அமலாக்கத்துறை சம்மன்.
- இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் மொகாலியில் இன்று நடைபெறுகிறது.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.