Top 10 News: பொங்கல் பரிசு முதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய டாப் 10 செய்திகள்
- தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் சண்முக சுந்தரம் திடீர் விலகல்.
- போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது.
- தமிழ்நாடு முழுவதும் 95.62% பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
- போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
- பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
- முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
- போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இன்று முதல் மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டம்.
- கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை எச்சரிக்கை
- சென்னை ராயபுரம் 52ஆவது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
- இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 9,764 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.