தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்.. கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Top 10 News : பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்.. கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Divya Sekar HT Tamil
Jan 07, 2024 07:04 AM IST

Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடி மதிப்பில் அமைகிறது நவீன திரைப்பட நகரம். அனிமேஷன், VFX உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரும் 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகின்றன: வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு; திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் இன்று (ஜன.07) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட சேதாரங்கள் சரி செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையே வழக்கம் போல் ரயில்சேவை மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இன்று 12-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்றத் தொகுதிகளில், 50 தொகுதிகளுக்கு அரசால் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது

சூரியனை ஆராய 15 லட்சம் கி.மீ பயணித்து எல்-1 புள்ளியை அடைந்தது ஆதித்யா விண்கலம்; இஸ்ரோ விஞ்ஞானிகளின் அபார சாதனையை நாடே பாராட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம்.

ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்