Top 10 News: நன்றி கூறிய விஜய் முதல் திமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
“Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”

TOP 10 NEWS
- ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம்.
- திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் மக்களிடையே சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
- திருச்சி தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை
- சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ரகுகணேஷின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்துகிறது.
- பெருந்துறையில் நடந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநாட்டில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது.
- புதுச்சேரியில் நடந்த கோட் திரைப்பட படப்பிடிப்புக்கு மத்தியில் குவிந்த ரசிகர்களை நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சந்தித்தார்.
- பாஜகவை தவிர மற்ற கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
- வழிவிடுவது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள்-நடத்துனர்கள் இடையே மோதல்.
- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர்.
- பொதுசிவில் சட்ட வரைவு மசோதா உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.