தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Morning Top 10 News On Febuary 4, 2024

Top 10 News : தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. பிரதமர் மோடி அசாம் பயணம்.. இன்றைய முக்கிய செய்திகள்!

Divya Sekar HT Tamil
Feb 04, 2024 07:08 AM IST

Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் (file pic)
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் (file pic)

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது பட்டதாரி ஆசிரியர் தேர்வு. 130 மையங்களில் 41,485 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக முயல்வதாகத் தகவல். எதிரியை வீழ்த்த ஒன்று சேர இபிஎஸிடம் வலியுறுத்தியதாக ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.

ஆரணி சட்டப்பேரவை தொகுதியில் இன்று என் மண் என் மக்கள் பயணத்தை தொடங்குகிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறப்பு. சம்பா பயிர் சாகுபடிக்காக கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க நடவடிக்கை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 624-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இன்று காலை 11:30 மணியளவில், குவஹாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.

சிலி நாட்டில் காட்டுத்தீயால் 19 பேர் உயிரிழப்பு. 43,000 ஹெக்டேர் அளவுக்கு தீ பரவியதால் மக்கள் அச்சம்.

ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான போட்டிகளும் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்