Top 10 News : அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய்.. கேட் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.. இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய்.. கேட் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.. இன்றைய முக்கிய செய்திகள்!

Top 10 News : அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய்.. கேட் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.. இன்றைய முக்கிய செய்திகள்!

Divya Sekar HT Tamil
Feb 03, 2024 07:06 AM IST

Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் திறப்பு. சம்பா பயிர்களைக் காத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். நாளை அசாம் செல்லும் பிரதமர் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளித்துள்ள அரசியல் சாசன பிரிவை திருத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் எம்.பி. வில்சன் தனி நபர் மசோதா தாக்கல்.

'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்தது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம். புதிய முதலமைச்சர் சம்பாய் சோரனை சந்திப்பார் என எதிர்பார்ப்பு.

'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் உள்ள ராணுவப் படைகளை திரும்ப பெற இந்தியா ஒப்புதல். இருநாட்டு தூதரக அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி.

ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ கேட்ஜெட் இன்று அறிமுகமாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.