Top 10 News: திமுக கூட்டணி பேச்சுவார்த்தை முதல் ஓட்டுநர் உரிமம் வரை இன்றைய டாப் 10 செய்திகள்!
“உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- திமுக, காங்கிரஸ் கட்சிகள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள் என திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்.
- தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்கலால் மறைக்கலாமா என பிரதமருக்கு திமுக பொருளாளர் டிஆர் பாலு கேள்வி.
- திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர் என கனிமொழி பேட்டி.
- திமுகவால் கூட்டணி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியுமா என அண்ணாமலை கேள்வி.
- விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் திமுக இன்று மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை.
- திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.
- மக்கள் நீதி மய்யத்துடன் திமுக தொகுதி பங்கீடு இரண்டு நாட்களில் இறுதி ஆகும் என தகவல்.
- கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டி.
- அதிமுக கூட்டணியில் திருவள்ளுவர் தொகுதியை கேட்டுள்ளதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி.
- ஓட்டுநர் உரிமங்கள் இனி விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.