Top 10 News: புறநகர் ரயில்கள் ரத்து.. அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- இன்றைய டாப் 10 செய்திகள்!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
டாப் 10 செய்திகள்
தமிழ்நாடு
- தூத்துக்குடி சிப்காட்டில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவனத்தின் புதிய மின்கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
- தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பாரமரிப்பு பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புறநகர் ரயில்கள் இயக்க ரத்து செய்யப்பட்டு உள்ளது.
- சென்னையில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இந்த வழித்தடத்தில் கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- பிரதமர் மோடி, ரூ.313 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாட்டின் 14 திட்டப் சுகாதார திட்டங்களை 14 திட்ட பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
- மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை இன்று உதகையில் தொடங்கப்பட உள்ளது.
- இடும்பாவனத்தில் நடக்கும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசுகிறார்.
இந்தியா
- குஜராத் மாநிலத்தின் முதல் ஏய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இதில் சுமார் 720 படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.
- உபியில் ராகுல் காந்தியின் பாரத் நியாய் யாத்திரையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அகிலேஷ் பங்கேற்க உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.