Top 10 News : திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம்.. அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. முக்கிய செய்திகள்!
Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையாகக் கொண்டதும் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்றக் காவல்; கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி சென்னைக்கு எடுத்துச் செல்ல முயன்ற ரூ.7.23 கோடி பறிமுதல்; 15 பேரை பிடித்து போலீஸ் விசாரணை.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. ஹைதராபாத் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்குமா என எதிர்பார்ப்பு.
மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில், சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி, மறக்குமா நெஞ்சம், பாம்பாட்டம், சிக்லெட்ஸ் ஆகிய படங்கள் இன்று வெளியாகின்றன.
இன்று நடிகர் சிம்புவின் எஸ்டிஆர் 48 பட அப்டேட் வர வாய்ப்புள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்